முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / மனைவியின் ஆபாச போட்டோக்களை இணையத்தில் பதிவிட்ட முன்னாள் கணவர்..! குமரியில் அதிர்ச்சி சம்பவம்

மனைவியின் ஆபாச போட்டோக்களை இணையத்தில் பதிவிட்ட முன்னாள் கணவர்..! குமரியில் அதிர்ச்சி சம்பவம்

முன்னாள் கணவர் கைது

முன்னாள் கணவர் கைது

Kanniyakumari crime news | என்னுடன் வாழாமல் போனவள், மானத்துடன் வாழ கூடாது என்று நினைத்து இவ்வாறு செய்ததாக வாக்குமூலம்.

  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

நாகர்கோவில் அருகே தன்னுடன் வாழ மறுத்த மனைவியின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட முன்னாள் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம்   முட்டம்  பகுதியை சேர்ந்த 32 வயது இளம்பெண்ணிற்கும்  தோவாளை பகுதியை சேர்ந்த சதீஷ் பெருமாள் (34) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. சதீஷ் பெருமாள்  மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார்.  இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  இளம்பெண்ணுடன் இவர்களது 9 வயது மகளும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், திருமண உறவின் போது,  இருவரும் தனிமையில் இருக்கும் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை ,  இணையத்தில் சதீஷ் பெருமாள் பதிவேற்றம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.  இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில் “என்னுடன் வாழாமல் போனவள், மானத்துடன் வாழ கூடாது என்று நினைத்து இவ்வாறு ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்ததாக”சதீஷ் பெருமாள் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ஐ.சரவணன், நாகர்கோவில்.

top videos
    First published:

    Tags: Crime News, Kanniyakumari, Porn websites