முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறிய காங்கிரஸ் பிரமுகர் கைது... கன்னியாகுமரியில் பரபரப்பு

மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறிய காங்கிரஸ் பிரமுகர் கைது... கன்னியாகுமரியில் பரபரப்பு

கைது செய்யப்பட்ட நபர்

கைது செய்யப்பட்ட நபர்

kanniyakumari News | கன்னியாகுமரியில் பெண்களிடம் அத்துமீறி நடந்த காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மதுபோதையில் பெண்களிடம் தவறாக நடக்கமுயன்ற காங்கிரஸ் பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நந்தங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜன் சேவியர்(52). காங்கிரஸ் கட்சியில் நந்தங்காடு கிளை செயலாளராக இருந்துவரும் இவரது மனைவி வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இதனால் தனிமையில் இருத்துவரும் ராஜன்சேவியர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் அப்பகுதி பெண்களை தகாத வார்தைகளை கூறி திட்டி வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராஜன் சேவியர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள பெண்களிடம் தனது உடைகளை அவிழ்த்து தவறாக நடக்கமுயன்றாக தெரிகிறது. இதையடுத்து ராஜன் சேவியரை பெண்கள் மற்றும் அப்பகுதியினர் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் பெண்களிடம் தவறாக நடக்கமுயன்ற ராஜன் சேவியரை கைது செய்தனர்.

இதையும் படிங்க:  இன்ஸ்டா காதலியுடன் பைக் ரேஸ் சென்று விபத்து.. காதலியை சாலையில் போட்டு தப்பிய கஞ்சா போதை காதலன்..

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இவர் மீது ஏற்கனவே பெண்களிடம் தவறாக நடக்கமுயன்றது ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாகவும்  பல குற்றசாட்டுகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து ராஜன் சேவியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பெண்களிடம் தவறாக நடக்கமுயன்ற காங்கிரஸ் பிரமுகரை பெண்கள் முற்றுகையிட்டதை தொடருந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த  சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Kanniyakumari, Local News