கன்னியாகுமரி அருகே தங்கை உறவு முறை உள்ள இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி கொல்லன் விளை பகுதியைச் சேர்ந்த 29 வயதான பிபின் பிரியனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். ஆறு குற்ற வழக்குகளுடன் குற்ற சரித்திர ரவுடி பட்டியலில் இடம் பிடித்துள்ள இவர், பிரபல அரசியல் பிரமுகர் ஒருவருக்கு கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த இவரது பெரியப்பா மகள் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர். இவருக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இல்லாததால் அண்ணன் முறையான பிபின் பிரியனுடன் சகஜமாக பழகி வந்துள்ளார். அவரும் இளம்பெண்ணை கல்வி நிலையங்களுக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி இளம்பெண் ஆலங்கோடு பகுதியில் வீட்டிற்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த போது, அந்த வழியாக காரில் வந்த பிபின் பிரியன் அவரை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி காரில் ஏற்றியுள்ளார். ஆனால் வீட்டிற்கு அழைத்து செல்லாமல் அவரது நண்பர் ஒருவரது வீட்டிற்கு அழைத்து சென்று குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததோடு அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
பின்னர் அந்த ஆபாச வீடியோவை இளம்பெண்ணிற்கு அனுப்பி வைத்து இணையத்தில் பரப்பாமல் இருக்க வேண்டும் என்றால் நான் அழைக்கும் போதெல்லாம் என் ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டி வந்துள்ளார். அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவிக்கவே கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த அவர், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மிரட்டல் ஆடியோவுடன் புகாரளித்தார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவுடி பிபின் பிரியனை வலைவீசி தேடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kanniyakumari