முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / மதவெறுப்புணர்வை தூண்டும் வகையில் ட்வீட்.. பாஜக நிர்வாகி கைது

மதவெறுப்புணர்வை தூண்டும் வகையில் ட்வீட்.. பாஜக நிர்வாகி கைது

பாஜக நிர்வாகி கைது

பாஜக நிர்வாகி கைது

மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செந்தில்குமார் பதிவிட்டதாக திமுக உறுப்பினரான தினேஷ் குமார் என்பவர் அளித்த புகாரில் செந்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர் மேலும் 1000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கி இருக்கும் இந்தகோர விபத்து குறித்து சி.பி.ஐ விசாராணை நடத்தி வருகிறது.

இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறியும் விசாரனைகள் நடைபெற்று வருகின்றன. ரயில் விபத்து குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில் ஒடிசா ரயில் விபத்து குறித்து அங்கு பணிபுரியும் இஸ்லாமியர் ஒருவரை விசாரிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க உறுப்பினரான வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் தக்கலை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தக்கலை காவல் நிலைய எல்லையில் பருத்திவிளை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.

அந்த ட்வீட்டில், 'இதுவரை ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து 300-க்கும் மேற்பட்டவர்களை கொன்றது மற்றும் 900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தது அது நடந்த ரயில் நிலையத்தின் பெயர். பஹானாகா நிலையம். இந்த ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டரின் பெயர் முகம்மது ஷெரீப் அகமது. விபத்து குறித்து விசாரிக்க' என குறிப்பிட்டதுடன் ஸ்டேஷன் மாஸ்டர் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்திருந்தார்.

இதையும் படிக்கநாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணியா? குமாரசாமி விளக்கம்...

பின்னர், இந்த பதிவிற்கு மீண்டும், தான் போட்ட இந்த பதிவு தவறானது என்றும். யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்துக்கொள்ளவும் எனவும் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செந்தில்குமார் பதிவிட்டதாக திமுக உறுப்பினரான தினேஷ் குமார் என்பவர் நேற்று (07.06.2023) காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  தக்கலை போலீஸார் குற்ற எண் 238/2023 U/S. 153, 153A (1)(a), 505 (1)(b), 505 (2) IPC உளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும், பாஜக உறுப்பினரான செந்தில்குமாரை தக்கலை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: BJP cadre, Kanniyakumari, Odisha, Train Accident