குமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையம் அருகே வாடகை வீட்டில் தங்கி இருந்து பிச்சை எடுத்து வரும் ஆந்திர மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தி ரூ.20,000 பணத்தை அபகரித்து சென்ற காங்கிரஸ் கட்சி பிரமுகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையம் அருகே கடந்த 8 வருடங்களாக ஆந்திர மாநிலம் அனந்தபுரம் காலனி பகுதியை சேர்ந்த ராமன்ஜி அவரது மனைவி லட்சுமி மற்றும் உறவினர் சாவித்ரி என மூன்று பேர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து பிச்சை எடுக்கும் தொழில் செய்து வருகின்றனர்.
இதில் கிடைக்கும் வருமானத்தில் வீடு வாடகை செலுத்தியும் குடும்ப செலவு போக மீதமுள்ள தொகையை சேமித்து வைத்து ஆந்திராவில் தங்கி இருக்கும் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி இரவு மூன்று பேரும் வீட்டில் இருக்கும் போது அங்கு மது போதையில் வந்த மூன்று வாலிபர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ராமன்ஜி அவரது மனைவி லட்சுமி மற்றும் சாவித்ரியை சரமாரியாக தாக்கிவிட்டு அவர்களை மிரட்டி ஊருக்கு அனுப்ப வைத்திருந்த ரூ.20,000 பணத்தை அபகரித்து சென்றுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மூன்று பேரும் காயங்களுடன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாக்குதல் சம்பந்தமாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் மருத்துவமனைக்கு நேரில் வந்து வாக்குமூலம் பெற்ற பின்பு அரசியல் கட்சியினரின் அழுத்தம் காரணமாக வழக்கு பதிவு செய்யாமலும் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தாமலும் இருந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லையில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது...
இந்த நிலையில் தங்களை தாங்கியவர்கள் மீது வழக்குபதிவு செய்யகேட்டு பாதிக்கப்பட்டவர்கள் தினமும் மார்த்தாண்டம் காவல்நிலையம் முன்பு காத்திருந்து வந்ததை தொடர்ந்து, போலீசார் தாக்குதல் நடத்தி பணத்தை அபகரித்து சென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய நபர்கள் சடையன்குழி பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் அபிஷாந்த், மதிலகம் பகுதியை சேர்ந்த பெனீஷ், மற்றும் விரிகோடு பகுதியை சேர்ந்த வினீத் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kanniyakumari