முகப்பு /கன்னியாகுமரி /

உள்ளூர் முதல் வெளிநாடு வரை.. BA தமிழ் கற்பவர்களுக்கு எந்தெந்த துறையில் வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!

உள்ளூர் முதல் வெளிநாடு வரை.. BA தமிழ் கற்பவர்களுக்கு எந்தெந்த துறையில் வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!

X
மாதிரி

மாதிரி படம்

BA Tamil Graduates | தமிழை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழியில் இருக்கும் வாய்ப்புகளையும் மற்றும் தமிழ் மொழியில் சாதித்தவர்களையும் விளக்குகிறார் ஹோலி கிராஸ் கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர் எடல் மேபல் குயின். 

  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஹோலி கிராஸ் தமிழ்த்துறை 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டு மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், BA தமிழ் மொழி படித்தால் இருக்கும் வாய்ப்புகளையும் மற்றும் தமிழ் மொழியில் சாதித்தவர்களையும் விளக்குகிறார் ஹோலி கிராஸ் கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர் எடல் மேபல் குயின். 

ஆசிரியர் பணி 

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆசிரியராகவோ, பேராசிரியராகவோ பணிபுரியலாம். பிழைத்திருத்தும் பணி தமிழ்மொழியை இலக்கண ரீதியாகப் பயிலும்போது அரசு சார்ந்த, அரசு சாராத பதிப்பகங்களில் பிழைத்திருத்தும் பணியாளராகலாம். இத்துறையில் பணியாளர்கள் மிகக்குறைவு எனவே வேலைவாய்ப்பு மிகமிக அதிகம்.

போட்டித்தேர்வுகள்

தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் (TNPSC) 100 மதிப்பெண்களுக்கான வினாக்கள் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலிருந்தே கேட்கப்படுகின்றன. எனவே தமிழ் கற்கும்போது போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று அரசுப்பணியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு சாத்தியமாகிறது.

ஊடகங்கள் 

பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற

ஊடகங்களில் செய்தி ஆசிரியராக, செய்தி வாசிப்பாளராக, அறிவிப்பாளராக வர்ணனையாளராக பணிபுரியலாம்.

வெளிநாட்டு பணி 

தமிழ் கற்றால் உள்ளூரில் மட்டும்தான் பணிபுரிய முடியுமா? இல்லை சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் பத்திரிகை மற்றும் ஊடக துறைகளில் பணிபுரியலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எழுத்தாளர்

top videos

    தமிழ் கற்கும்போது எழுத்தாளர் ஆகுவதற்கான தகுதியும், திறமையும் வளர்வது உறுதி. திருக்குறள் உலக பொதுமறையாம் திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. இது தமிழுக்கு பெருமை” இவ்வாறு அவர் கூறினார்.

    First published:

    Tags: Education, Jobs, Kanniyakumari, Local News