கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் குரு பெயர்ச்சியை யொட்டி வருகிற 23ம் தேதி சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி வருகிற 22-ந் தேதி இரவு நடைபெறுகிறது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். இதையொட்டி 23-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு ஹோம பூஜை நடக்கிறது. 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.
கோவிலில் பக்தர்கள் பரிகாரங்கள் செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, வெள்ளை அரளிமாலை, மஞ்சள் நிற துண்டு, முல்லை பூ மாலை மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்து பயன்பெறலாம் என குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதேபோல் சுசீந்திரம் தாழக்குளம் பிள்ளையார் கோவில், களியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேசுவரா கோவில், கன்னியாகுமரி குக நாதீஸ்வரர்கோவில், தாழக்குடி ஜெகதீஸ்வரர் கோவில், திருப்பதி சாரம் சடையப்பர் கோவில், அழகிய பாண்டியபுரம் மகாதேவர் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், களியங்காடு சிவன் கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் குமரி மாவட்டத்தில் குரு பகவான் சன்னதி உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi, Kanniyakumari, Local News