கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் வனச்சரகத்திற்கு உட்பட்டபறளியாறு அரசு ரப்பர் கழக லேபர் காலனி பகுதியில் ராஜநாகம் பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினர், அப்பகுதியில் வீட்டில் இருந்த சுமார் 13 அடி நீளமுள்ள பெரிய ராஜ நாக பாம்பை கழுத்தில் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.
இந்த ராஜநாகம் மாறாமலையில் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. வனத்துறையினர் ராஜநாகத்தை பிடிக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
செய்தியாளர் : சரவணன் ஐயப்பன் (கன்னியாகுமரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanniyakumari, King cobra, Snake, Viral Video