கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதால் மேலும், மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், இரணியல், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் உள்ளிட்ட அணை பகுதியிலும் மழை பெய்தது. பேச்சிபாறையில் அதிகபட்சமாக 65 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனால், பேச்சிபாறை அணைக்கு வரக்கூடிய நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதால் பொதுபணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Must Read :சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!
இதேபோல பெருஞ்சாணி அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து குழித்துறையாறு, கோதையாறு, வள்ளியாறு, பரளிஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flood alert, Kanyakumari, Local News