ஹோம் /கன்னியாகுமரி /

குமரி திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குமரி திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

திற்பரப்பு அருவி

திற்பரப்பு அருவி

Kanyakumari news : குமரி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், திற்பரப்பு அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

வட கிழக்கு பருவ மழை பெய்து வருதால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் முள்ளங்கினாவிளை 13.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.இதன் தொடர்ச்சியாக, பூதப்பாண்டி-3, கன்னிமார்-2.8, கொட்டாரம்-2.8, மயிலாடி-12.2, நாகர்கோவில்-3, புத்தன்அணை-2, சுருளகோடு-9, தக்கலை-5, குளச்சல்-8.6, இரணியல்-3, பாலமோர்-11.6, திற்பரப்பு-2.8, ஆரல்வாய்மொழி-3.2, அடையாமடை-13, ஆனைகிடங்கு-8, பேச்சிப்பாறை-3.2, பெருஞ்சாணி-3.4, சிற்றார் 1-2, சிற்றார் 2-3, முக்கடல்-5.6 மி.மீ என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

மழை காரணமாக சிற்றாறு பட்டணங்கால்வாயில் குலசேகரம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. தற்போது கால்வாயில் கிடந்த மண் அகற்றப்பட்டுள்ளது. சிற்றாறு-1 அணையின் மொத்த கொள்ளளவு 18 அடி ஆகும். நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 14.92 அடியாக இருந்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. நேற்று 12-வது நாளாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இன்றும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் பெரிதாக கவலையடைந்து வருகின்றனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Falls, Kanniyakumari, Local News, Tourist spots