முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி

கோப்புப்படம்

கோப்புப்படம்

செல்னாவிற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கேரளா ஆனப்பாறை பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது எனவும் திருமணமான ஒரிரு தினங்களில் செலினா தனது தாயார் வீட்டுக்கு வந்துள்ளார்

  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டம் புலியூர் சாலை ஓடல் விளை குளவிளையை சேர்ந்த குருசுமுத்து மகள் செலினா (47). இவர் விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன் பொதுமக்களுக்கு மனுக்கள் எழுதும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு மனுக்கள் எழுதும் தொழிலை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலையில் இருந்து செலினாவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து துர்நாற்றம் அதிகமானதால் அக்கம் பக்கத்தினர் செலினாவின் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது அழுகிய நிலையில் செலினா இறந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் அருமனை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக அருமனை போலீசார் விரைந்து சென்று செலிவினாவின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க : வேங்கைவயல் விவகாரம் : வெளியான அதிர்ச்சி தகவல் .! குற்றவாளிகளை நெருங்கும் சிபிசிஐடி போலீசார்

இதையடுத்து போலீசார், இந்த உயிரிழப்பு தற்கொலையா.? கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து விசாரித்ததில் செல்னாவிற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கேரளா ஆனப்பாறை பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது எனவும் திருமணமான ஒரிரு தினங்களில் செலினா தனது தாயார் வீட்டுக்கு வந்துள்ளார் எனவும் பின்னர் கணவர் வீட்டுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

top videos

    சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தாய் தந்தை இறந்துவிட்டதால் செலீனா தனிமையில் வீட்டில் வசித்து வந்துள்ளார் எனவும், இவர் அக்கம்பக்கத்தினர் யாரிடமும் அதிகமாக பேசும் பழக்கம் இல்லாதவர் என்பதால், இவர் வெளியில் அதிக நாட்கள் வராததை கூட யாரும் கவனிக்கவில்லை என விசாரணையில் அருகில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

    First published:

    Tags: Crime News, Dead body, Kanniyakumari