ஹோம் /Kanniyakumari /

கன்னியாகுமரி: சுற்றுலா பயணிகளுக்கு  அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம்

கன்னியாகுமரி: சுற்றுலா பயணிகளுக்கு  அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம்

X
தமிழக

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் அடிப்படையில் சுற்றுலா தலங்களில் 50 சதவீத சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் அடிப்படையில் சுற்றுலா தலங்களில் 50 சதவீத சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இருப்பதில் முதல் வரிசையில் உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், மாவட்ட நிர்வாகத்திற்கு நல்ல வருவாய் கிடைத்து வந்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் அடிப்படையில் சுற்றுலா தலங்களில் 50 சதவீத சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

திற்பரப்பு மற்றும் தொட்டி பாலம் சென்று விட்டு பேச்சிப்பாறை அணையை பார்ப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பேச்சிப்பாறை அணையில் போட்டிங் உள்ளிட்ட எதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில், பல்வேறு முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் வீடு திரும்புவதாக கூறுகின்றனர்.

செய்தியாளர்: சார்லஸ் கிப்சன், நாகர்கோவில்

First published:

Tags: Kanyakumari, Nagercoil, Tourism