முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / கன்னியாகுமரியில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்... 14 வயது சிறுவனை கைது செய்தது சிபிசிஐடி..!

கன்னியாகுமரியில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்... 14 வயது சிறுவனை கைது செய்தது சிபிசிஐடி..!

குளம்- உயிரிழந்த சிறுவனின் தாய்

குளம்- உயிரிழந்த சிறுவனின் தாய்

Kerala | கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே 12 வயது சிறுவன் ஓராண்டிற்கு முன்  குளத்தில் மர்மமான முறையில்  மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தில்  14 வயது சிறுவன் சிபிசிஐடி போலீஸாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான் .

  • Last Updated :
  • Kanniyakumari, India

கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்த முகமது நஜீப் - சுஜிதா தம்பதியரின் மகன் 12 வயதான ஆதில் முகமது, இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் கன்னியாகுமரி மாவட்டம் திட்டு விளையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு தாயாருடன் சென்றிருந்த ஆதில் முகமது, மே மாதம் ஆறாம் தேதி  திடீரென்று மாயமானார். மே எட்டாம் தேதி திட்டுவிளை அருகே மணத்திட்டை பகுதியில் உள்ள நந்திரிக்குழி குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆதில் முஹம்மதுவின் மரணத்திற்கு திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன்தான் காரணம் எனவும் அந்த சிறுவன் ஆதில் முகமதுவை குளத்திற்கு அழைத்துச் சென்ற போது மரணம் ஏற்பட்டுள்ளதால் சிறுவன் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஆதில் முகமதுவின் பெற்றோரும் உறவினர்களும் குற்றஞ்சாட்டினர்.

அதைத் தொடர்ந்து பூதப்பாண்டி போலீசார் சிறுவனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  அப்பகுதி மக்கள் திட்டுவிளை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆயினும்,  மரணம் தொடர்பான மர்ம முடிச்சு அவிழாத நிலை தொடர்ந்தது. இதற்கிடையே, கேரள முதல்வரை ஆதில் முகமதுவின் பெற்றோர் நேரில் சந்தித்து தங்கள் மகனின் மரணம் தொடர்பாக உண்மையான காரணத்தை கண்டறிய கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதில், முஹம்மது மரணம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அதை தொடர்ந்து, ஆதில் முகமது மரணம் தொடர்பாக தென் மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் மேற்பார்வையில் மீண்டும் விசாரணை தொடங்கியது. பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்றது. ஆதில் முகமதுவை அழைத்துச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவனிடம் தொடர்ந்து விசாரித்ததோடு, சம்பவம் நடைபெற்ற குளத்துக்கும் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

காணாமல் போன அன்று ஆதில் முகமது டி-ஷர்ட் அணிந்திருந்த நிலையில், சடலமாக மீட்கப்படும்போது டி-ஷர்ட் இல்லை. எனவே, ஆதில் முஹம்மது அணிந்திருந்த டீ ஷர்ட் கண்டுபிடிப்பது முக்கியமானதாக கருதிய போலீசார், குளத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றி சோதனை நடத்தினர்.

ஆயினும், டீ ஷர்ட் கிடைக்கவில்லை. வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா அரசு சார்பில் தமிழக  டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

Also see... கோவையில் பிடிப்பட்ட வெள்ளை நிற நாகப்பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு!

அதையொட்டி, சிபிசிஐடி போலீசார் வழக்கு விசாரணை தொடர்ந்து நடத்தி வந்தனர். தீவிர விசாரணை மேற்கொண்ட சிபிஐ சிஐடி போலீசார் ஆதில் முகமது மரணம் தொடர்பாக அன்று அவனை அழைத்துச் சென்ற 14 வயது சிறுவனை தற்போது கைது செய்துள்ளனர்.

top videos

    செய்தியாளர்: ஐ.சரவணன், நாகர்கோவில்     

    First published:

    Tags: CBCID, Crime News, Kerala