கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தங்களை தாங்களாகவே சிறை வைத்து கொண்டு ஒரு குடும்பம் வாழ்ந்து கொண்டிருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஓல்ட் ஸ்டேட் பாங்க் (OLD STATE BANK) காலனி தெருவில் பெர்ஷியஸ் அலெக்சாண்டர்- மாலதி தம்பதியினர், இவர்களின் இரண்டு மகள்கள் தங்களை வீட்டில் சிறைவைத்து கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக வெளியே வரவில்லை. இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் தீயணைப்பு துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையில் அங்கு சென்றனர். அப்போது வீடு பூட்டிய நிலையில் இருந்தது. பக்கத்தில் விசாரித்த போது சரிவர பதில் தெரிவிக்காததால், கூப்பிட்டும் பதில் வராததால் உடனடியாக வீட்டின் கதவை அகற்றி தீயணைப்புத் துறையினர் வீட்டின் மதில் ஏறி குதித்து உள்ளே புகுந்து சென்றனர்.
அப்போது வீட்டுக்குள் தங்களை சிறை வைத்தபடி இருந்த வழக்கறிஞரான பெர்சியஸ் அலெக்ஸாண்டர் அவரது மனைவி மாலதி மற்றும் பட்டப் படிப்புகள் முடித்த இரண்டு மகள்கள் அங்கிருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்து வந்தனர்.
மேலும் தங்களுக்கு உயிர் ஆபத்திருப்பதாகவும் தங்களை திட்டமிட்டு மர்ம நபர்கள் கொலை செய்ய மறைந்து இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தாங்கள் நேரடியாக ஏசு விடம் பேசுவதாக பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் படிக்க... காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது..!
இதில் தாங்கள் நலமாக இருப்பதாகவும் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதையும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றனர் . மேலும் அவரது உறவினர் ஒருவர் இதுபோன்று அத்துமீறி வீட்டில் புகுந்து விசாரணை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது என போலீசாரிடமும் செய்தியாளர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: ஐ.சரவணன், நாகர்கோவில்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kanniyakumari