முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / செல்போனில் கேம் விளையாடிய போது விபரீதம்... போன் வெடித்ததில் கை விரல்கள் துண்டாகி சிறுமி பலி

செல்போனில் கேம் விளையாடிய போது விபரீதம்... போன் வெடித்ததில் கை விரல்கள் துண்டாகி சிறுமி பலி

உயிரிழந்த சிறுமி

உயிரிழந்த சிறுமி

Kerala News : குழந்தைகள் அதிக அளவில் மொபைல் போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கவனத்தில் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் செல்போன் வெடித்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் போர்வைக்குள் படுத்து கொண்டு கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து சிதறியதாக சிறுமியின் பாட்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யா ஶ்ரீ, 8வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். 24ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் மொபைல் ஃபோனில் கேம் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென செல்போன் வெடித்து சிதறியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி, பேட்டரியில் இருந்த இரசாயனங்களே வெடிப்புக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. விபத்தின் போது போன் டிஸ்ப்ளே வழியாக வெளி வந்து வெடித்து சிதறியதில் சிறுமியின் முகம் சிதறியதுடன், போனை பயன்படுத்திய கை விரல்கள் துண்டிக்கப்பட்டன. மேலும் தொலைபேசி விரிவான பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஒரே வாட்ஸ்ஆப் எண்ணை இனி 4 மொபைல்களில் பயன்படுத்தலாம்... வந்தது அசத்தல் அப்டேட்..!

மேலும் காவல்துறை விசாரணையில் இந்த செல்போனை சிறுமியின் தந்தையின் இளைய சகோதரர் கடந்த 3ஆண்டுகளுக்கு முன் செல்போனை வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு பேட்டரி மாற்றப்பட்டுள்ளது, சம்பவத்தின் போது சிறுமியும் அவரது பாட்டியும் இருந்துள்ளனர். அப்போது பாட்டி சமையல் அறைக்கு சென்றுள்ளார். அப்போழுது அந்த சிறுமி போர்வைக்குள் படுத்து கொண்டு கேம் விளையாடிக்கொண்டிருந்ததாக சிறுமியின் பாட்டி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

top videos

    ஃபோன் வெடித்து மூன்றாம் வகுப்புப் படிக்கும் 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் அதிக அளவில் மொபைல் போன் பயன்படுத்துவது பெற்றோர்கள் கவனத்தில் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    First published:

    Tags: Kanniyakumari, Kerala