முகப்பு /கன்னியாகுமரி /

கன்னியாகுமரியில் நாளை இங்கெல்லாம் பவர்கட்..! முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு..!

கன்னியாகுமரியில் நாளை இங்கெல்லாம் பவர்கட்..! முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு..!

மாதிரி படம்

மாதிரி படம்

Tomorrow Power Shutdown in Kanniyakumari : கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (16.05.2023) (செவ்வாய்க்கிழமை) காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை 110/33-11கிவோ கன்னியாகுமரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.

இதனால் முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு தங்களை ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

கொட்டாரம், சுசீந்திரம், சாமிதோப்பு, அகஸ்தீஸ்வரம், ஈத்தங்காடு, காக்குமூர், மருங்கூர், ராஜாவூர், கீழமணக்குடி, சின்னமுட்டம், திருமூலநகர், வழுக்கம்பாறை, வாரியூர், அஞ்சுகிராமம், அழகப்பபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Kanniyakumari, Local News, Power cut