முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / கன்னியாகுமரியில் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு...!

கன்னியாகுமரியில் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு...!

வீட்டில் புகுந்த நல்ல பாம்பு

வீட்டில் புகுந்த நல்ல பாம்பு

Kanniyakumari | கன்னியாகுமரியில் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்கப்பட்டுஅடர்ந்த காட்டிற்குள் கொண்டு விட்டப்பட்டது.

  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம்  பால்குளம்  பகுதியில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் 12 அடி நீளமுள்ள ராஜநாகம்  மீட்கப்பட்டது. அதனை சாக்குப்பையில் கட்டி, வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்குள் கொண்டு விட்டனர். 

கன்னியாகுமரி  மாவட்டம்  பால்குளம்  அருகே  ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில்  கொடிய விஷத்தன்மை கொண்ட 12  அடி நீளம் கொண்ட  ராஜ நாகம் பாம்பு புகுந்து உள்ளது.  மிகப்பெரிய பாம்பு ஒன்று நுழைந்து விட்டதாக பால்குளம் ரப்பர் தோட்ட  குடியிருப்பு மக்கள் அழகியபாண்டிபுரம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் வனத்துறை குழுவினர் சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதியில் மூன்று மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர். பிடிபட்ட ராஜநாகத்தின் தலையை அழுத்தி பிடித்தவாறு வனத்துறையினர்  சாக்குப்பையில் அடைத்தனர்.

மேலும் படிக்க... வாக்குச்சாவடிக்குள் புகுந்த குரங்குகள், பாம்பு.. பொதுமக்கள் அலறல்!

பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடப்பட்டது. இங்கு ஏற்கனவே 13 அடி ராஜநாகம்  கடந்த இருதினங்களுக்கு முன் மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது.

top videos

    செய்தியாளர்: ஐ.சரவணன், நாகர்கோவில் 

    First published:

    Tags: Kanniyakumari, Snake