முகப்பு /காஞ்சிபுரம் /

பஞ்ச கங்கா திருக்குளத்தில் லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் தெப்பத்தில் உலா வந்த காஞ்சி காமாட்சி!

பஞ்ச கங்கா திருக்குளத்தில் லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் தெப்பத்தில் உலா வந்த காஞ்சி காமாட்சி!

X
தெப்பத்தில்

தெப்பத்தில் உலா வந்த காஞ்சி காமாட்சி

Kanchipuram Kamakshi Amman Temple : காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் பங்குனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு தெப்பல் திருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

சக்தி பீட தலமாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் பங்குனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, தெப்பத் திருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தெப்பத்திருவிழா உற்சவத்தை ஒட்டி லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பச்சை பட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிவித்து மல்லிகை பூ, பஞ்சவர்ண பூ, மாலைகள் சூட்டி மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டார்.

கோவில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா திருக்குளத்தில் வாழை மரங்கள் கட்டி, வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் லட்சுமி, சரஸ்வதி தேவிகளுடன் காமாட்சி அம்மனை எழுந்தருளச் செய்து தீபாராதனை காட்டி திருக்குளத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 5 சுற்றுகள் சுற்றி தெப்பல் திருவிழா உற்சவம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த தெப்பத்திருவிழா உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

top videos
    First published:

    Tags: Kanchipuram, Local News