முகப்பு /காஞ்சிபுரம் /

தமிழ் புத்தாண்டு.. தங்கத்தேரில் உலா வந்த காஞ்சி காமாட்சி!

தமிழ் புத்தாண்டு.. தங்கத்தேரில் உலா வந்த காஞ்சி காமாட்சி!

X
காஞ்சி

காஞ்சி காமாட்சியம்மன்

Kanchipuram kamatchi amman temple | காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை ஒட்டி, ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் தங்கத்தேர் வீதி உலா நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை ஒட்டி, ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் தங்கத்தேர் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தமிழ் ஆண்டுகளில் சுபகிருது ஆண்டு முடிந்து சோபகிருது ஆண்டு தொடங்கியதை ஒட்டி தமிழ் வருடப் பிறப்பு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சக்தி தலங்களில் முதன்மை ஸ்தலமாக விளங்கும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் தங்கத்தேர் வீதி உலா உற்சவம் நடைபெற்றது.

இந்த உற்சவத்தை முன்னிட்டு காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிகப்பு பட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிவித்து, மல்லிகை பூ, மனோரஞ்சிதப் பூ, செண்பகப்பூ, உள்ளிட்ட மலர்மாலைகள் சூட்டி லட்சுமி, சரஸ்வதி, தேவி களுடன் தங்கத்தேரில் எழுந்தருளச் செய்தனர்.

பின்னர் மேள தாள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வர காஞ்சிபுரம் நகரின் முக்கிய ராஜ வீதிகளில் தங்கத்தேர் வீதி உலா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ் புத்தாண்டை ஒட்டி நடைபெற்ற தங்கத்தேர் வீதி உலா உற்சவத்தை வழிநெடிகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News