காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள பழமையான மாமரத்தில் 4 சுவையுடைய மாங்காய்களுடன் காய்க்க தொடங்கியுள்ள நிலையில், அதனை ஏராளமான மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகின்றனர். பல திருவிளையாடல்களை நிகழ்த்திய சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்வி எனும் மண் ஸ்தலமாக காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோவில் விளங்கி வருகிறது.
சிவபெருமானை அடைவதற்காக பார்வதி தேவி காஞ்சிபுரம் கம்பை ஆற்றின் கரையில் மாமரத்தின் கீழ் மணலால் லிங்கம் செய்து வழிபட்டு தவம் செய்தார். அப்போது, கம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மாமரத்தின் கீழ் உள்ள மணல் லிங்கம் கரைந்து விடும் என்பதால் பார்வதி தேவி லிங்கத்தை கட்டித் தழுவிய நிலையில் சிவபெருமான் தோன்றி பார்வதி தேவியை மணம் புரிந்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது.
அந்த வகையில் பார்வதி தேவி தவம் புரிந்த மாமரம் இத்திருக்கோவிலில் தல விருட்சமாக விளங்கி வருகிறது. இந்த மாமரத்தில் ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு சுவைகளை தரக்கூடிய நான்கு வகையான மாங்காய்கள் காய்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.
3500 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படும் இந்த மாமரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டு போகும் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, பழமையான இந்த மாமரத்தின் மரபணுவை பிரித்தெடுத்து மீண்டும் அதை போன்ற மாமரத்தை உருவாக்கி பாதுகாப்பாக வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் பழமையும், தெய்வீகத் தன்மையும் கொண்டதாக கருதப்படும் மாமரம் தற்போதைய சீசனில் 4 வகையான சுவைகளுடன் 4 வகையான வடிவங்களில் மாங்காய்களுடன் காய்த்து தொங்க தொடங்கியுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கண்ணைக் கவரும் வகையில் கொத்துக்கொத்தாய் பூத்துக் குலுங்கும் மாமரத்தின் கீழ் சோமாஸ்கந்தராக அமைந்துள்ள ஏகாம்பரநாதரையும், ஏலவார் குழலி அம்மனையும், மாமரத்தையும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சுற்றி வந்து வணங்கி வழிபட்டு மாமரத்தை ஆர்வத்துடன் வியந்து பார்த்து செல்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News