முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலையத்தில் தீர்த்தவாரி உற்சவம் - பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

காஞ்சி காமாட்சி அம்மன் ஆலையத்தில் தீர்த்தவாரி உற்சவம் - பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

X
தீர்த்தவாரி

தீர்த்தவாரி உற்சவம்

Kancheepuram News | காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அம்மனை வழிபாடு செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் அருள்புரியும் அன்னை பார்வதி பரப்ரஹ்ம ஸ்வரூபினி என்று போற்றப்படுகிறார். இங்கு நடைபெற்று வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழா ஒவ்வொருநாளும் வான வேடிக்கைகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, பிரம்மோற்சவத்தை ஒட்டி காலை, மாலை என இரண்டு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் காஞ்சி காமாட்சி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்து வருகிறார்.

அந்த வகையில், மாசி மாத பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று பச்சை நிற பட்டு அணிந்து ஆபரணங்கள் பூட்டி, குங்குமப்பூ, மனோரஞ்சித பூ, மல்லிகைப்பூ என பல்வேறு மலர்களால் மாலைகள் அணிந்து லட்சுமி, சரஸ்வதியுடன் சிறப்பு அலங்காரத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உலா வந்து உற்சவம் மண்டபத்தில் எழுந்தருளினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் அங்கே அம்மனுக்கு வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து கோவில் திரு குளத்தில் மூழ்கி நீராட்டு செய்து, தீர்த்தவாரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கோவிலில் குளத்தில் நடைபெற்ற இந்த தீர்த்தவாரி உற்சவத்தில் கோவில் ஸ்தானிகர்கள், பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து புனித நீராடினர்.

First published:

Tags: Kancheepuram, Local News