முகப்பு /காஞ்சிபுரம் /

பச்சை பட்டுடுத்தி பவனி வந்த காஞ்சி காமாட்சி.. பக்தர்கள் பரவசம்..

பச்சை பட்டுடுத்தி பவனி வந்த காஞ்சி காமாட்சி.. பக்தர்கள் பரவசம்..

X
பச்சை

பச்சை பட்டுடுத்தி பவனி வந்த காஞ்சி காமாட்சி

Kanchipuram News : காஞ்சி காமாட்சி அம்மன் பச்சை பட்டுடுத்தி பவனி வந்து பக்தர்களை பரவசப்படுத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 25ம் தேதி மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் காமாட்சியம்மன் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரம்மோற்சவத்தின் 9ம் நாள் இரவு காஞ்சி காமாட்சியம்மன் வெள்ளித் தேரில் ராஜவீதிகளில், வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த உற்சவத்தில் பச்சை, சிவப்பு நிறபட்டு உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து, மனோரஞ்சிதப்பூ, செண்பகப் பூ, மல்லிகைப்பூ மலர் மாலைகள், சூடி, காஞ்சி காமாட்சியம்மன் வெள்ளிக் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க, காஞ்சிபுரம் நகரின் 4 ராஜ வீதிகளில் வலம் வந்தார். இந்த வெள்ளித் தேர் உற்சவத்தை முன்னிட்டு, வண்ண அதிர்வேட்டு வான வேடிக்கையும் நடைபெற்றது. ராஜ வீதிகளில் வெள்ளித்தேரில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழியெங்கும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து, வணங்கி வழிபட்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News