முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தேர் உலா.. பங்குனி மாத அமாவாசை உற்சவம்!

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தேர் உலா.. பங்குனி மாத அமாவாசை உற்சவம்!

X
தங்கத்தேரில்

தங்கத்தேரில் உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன்

Kanchipuram Car festival | பங்குனி மாதம் அமாவாசையை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மன் லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் தங்கத்தேரில் உலா வந்து அருள் பாலித்தார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

பங்குனி மாதம் அமாவாசையை ஒட்டி பச்சை பட்டு உடுத்தி சம்பங்கி பூ மாலைகள் அணிந்து லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் தங்கத்தேரில் காமாட்சி அம்மன் உலா வந்து அளிருள் பாலித்தார்.

நகரேஷூ காஞ்சி என போற்றப்படும் காஞ்சிபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் பங்குனி மாதம் அமாவாசையை ஒட்டி தங்கத்தேர் உற்சவம் நடைபெற்றது.

இந்த உற்சவத்தை ஒட்டி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பச்சைப்பட்டு உடுத்தி ஆபரணங்கள் அணிவித்து, மணக்கும் சம்பங்கி, மல்லிகைப் பூ மாலைகள் சூட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் லட்சுமி, சரஸ்வதி தேவிகளுடன் அன்னை காமாட்சி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

top videos

    காமாட்சி அம்மன் எழுந்தருளிய தங்க தேரினை உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்ல கோவில் வளாகத்தில் வலம் வந்தது. அப்போது, தங்கத்தேரில் ஜெலி ஜொலிக்க காட்சி தந்த காமாட்சி அம்மனை திரளான பக்தர்கள் கூடி தரிசித்து சென்றனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News