முகப்பு /காஞ்சிபுரம் /

5 குதிரைகள் பூட்டிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி காமாட்சி அம்மன்..

5 குதிரைகள் பூட்டிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி காமாட்சி அம்மன்..

X
தங்க

தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன்

Kanchipuram Kamaatchi Amman Temple | ராஜ வீதிகளில் தங்க சூரிய பிரபை  வாகனத்தில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழியெங்கும் பக்தர்கள் வணங்கி வழிபட்டனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

சக்தி பீட தலங்களில் ஒன்றானதும் உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவத்தை ஒட்டி நடைபெற்று வரும் நான்காம் நாள் உற்சவத்தில் வைலெட் நிற பட்டு உடுத்தி, நவரத்தின ஆபரணங்கள், மனோரஞ்சித பூ, மல்லிகைப்பூ,குருவிவேர் கருப்பு மாலை, அணிந்து லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் 5 குதிரைகள் பூட்டிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் மேள தாளங்கள் முழங்க வேத பாராயண கோஷ்டியினர் வேதங்கள் பாடிவர காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வலம் வந்தார். ராஜ வீதிகளில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழியெங்கும் பக்தர்கள் காத்திருந்து கற்பூர ஆரத்தி காட்டி சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

First published:

Tags: Kancheepuram, Local News