காஞ்சியின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும், உலக பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தின் 6ம் நாள் இரவு, பச்சை நிறப்பட்டுடுத்தி, திருவாபரணங்கள் அணிந்து, மனோரஞ்சிதம், செண்பகப்பூ மாலைகள் அணிந்து, பச்சைக் கிளி கட்டிய ஏலக்காய், கிராம்பு மாலை சூடி, காஞ்சி காமாட்சியம்மன் தங்க கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் மேள தாளங்கள், வாத்தியங்கள் முழங்க, காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தார். ராஜ வீதிகளில் தங்க கிளி வாகனத்தில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழியெங்கும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News