முகப்பு /காஞ்சிபுரம் /

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹1 கோடி கடனுதவி! - மகளிர்தின விழாவில் பெண்களை மகிழ்வித்த காஞ்சிபுரம் ஆட்சியர்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹1 கோடி கடனுதவி! - மகளிர்தின விழாவில் பெண்களை மகிழ்வித்த காஞ்சிபுரம் ஆட்சியர்

X
மகளிர்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹1 கோடி கடனுதவி

Kanchipuram District | காஞ்சிபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் கடனுதவிகளை வழங்கி, மகளிர்தின விழாவில் பெண்களை மாவட்ட ஆட்சியர் மகிழ்வித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் பெண் பணியாளர்கள், நியாயவிலைக்கடை பெண் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்துக்கொண்டு மகளிர் தின விழாவினை கொண்டாடினர். இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி கலந்துகொண்டு கேக் வெட்டி விழாவைத் தொடங்கி வைத்தார்.

பின்னர், ராஜகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.55 லட்சத்திற்கான கடன் உதவிகளையும், தாமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.50 லட்சத்திற்கான கடன் உதவிகள் என மொத்தம் ₹1.05 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்.

மேலும் கோலப்போட்டிகள், ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, கயிறு இழுக்கும் போட்டிகள் ஓவியப்போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டினார். பின்பு அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்டல இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News