முகப்பு /காஞ்சிபுரம் /

ஆதனூரில் நடைபெற்ற குத்துசண்டை போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய தாம்பரம் காவல் ஆணையர்!

ஆதனூரில் நடைபெற்ற குத்துசண்டை போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய தாம்பரம் காவல் ஆணையர்!

X
குத்துசண்டை

குத்துசண்டை போட்டி

Kanchipuram : காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் 2 நாட்களாக நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஆதனூரில் பாரதி குத்துச்சண்டை மையம் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் அமுதன் தலைமையில் நடைபெற்றது.

கடந்த 2 நாட்களாக நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் 600 க்கும் மேற்பட்ட ஆண், பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குத்துச்சண்டை வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகளையும் பதக்கங்களும் வழங்கினர்.

இந்நிகழ்வில் குத்துச்சண்டை பயிற்சியாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் மலர்விழி, ஆதனூர் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Kanchipuram, Local News