காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் ஹைதர் அலி-ஷாகிரா தம்பதியர். ஹைதர் அலி கூலி தொழில் செய்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் பெயர் ரேஷ்மா (21) இளைய மகளின் பெயர் கரிஷ்மா (18) மகன் லியாகத் அலி (10).
இவர்களின் மூத்த மகன் மாலிக் பாஷா ஒன்பது மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மகன் இறந்த துக்கத்தில் இருந்து இன்னும் இந்த குடும்பம் மீளவில்லை. தாய், தந்தை பெரிய வருமானம் ஈட்டுவதில்லை.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு யோகா கற்க வேண்டும் என்ற ஆர்வம் இவரின் இரு மகள்களுக்கும் வந்துள்ளது. அவர்களின் குடும்ப வழக்கப்படி திருமணம் ஆகாத பிள்ளைக்களை இது போன்ற பயிற்சிக்கு அனுப்பமாட்டார்களாம். எனவே இவர்களுடைய தாயார் ஷாகிரா இவர்களுக்காகவே யோகா கலை பயின்று அதில் டிப்ளமோ முடித்து மேலும் அதில் பட்டப் படிப்பு பயின்று தற்பொழுது இவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இதையும் படிக்க : அந்த மனசுதான் சார் கடவுள்..! ரூ.50,000-ஐ தவறவிட்ட ராஜஸ்தான் பயணிகள்- பத்திரமாக திருப்பிக்கொடுத்த ஆட்டோ டிரைவர்
ஆசிரியரான அன்னையின் பயிற்சியில் யோகா கலையை முழுவதும் கற்று தேர்ந்தனர் ரேஷ்மா மற்றும் கரிஷ்மா. இவர்கள் இருவரும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் கேடயங்களையும் சான்றிதழ்களையும் வென்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் ஒரு புறம் பதக்கங்களையும் கேடயங்களையும் மற்றும் சான்றிதழ்களையும் வாங்கி குவிக்க யோகா ஆசிரியரான தாயும் இன்னொரு புறம் இவர்களுக்கு சளைக்காது பரிசுகளை வாங்கி குவிக்க தொடங்கினார்.பொருளாதார தேவைகளுக்கு மிகவும் சிரமப்படும் இந்த சாதனையாளர்கள் வாங்கிய கோப்பைகளை வைக்கக்கூட வீட்டில் இடமில்லை. கூலித் தொழிலாளியான இவரின் தந்தை செய்து கொடுத்த மர அலமாரிகளில் பராமரித்து வருகின்றனர்.
மழைக்காலத்தில் வீடு ஒழுகுவதால் இவர்கள் வாங்கிய சான்றிதழ்களும் பதக்கங்களும் சேதமாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கான பண வசதி இல்லாததால் தேசிய சர்வதேச போட்டிகளில் இவர்களால் பங்கேற்க முடியாமல் வாய்ப்புகளை இழந்துள்ளனர்.
மேலும் தொண்டு நிறுவனங்கள் அல்லது நல்ல உள்ளங்கள் உதவினால் கூட ஒன்று அக்காவோ இல்லை தங்கையோ மட்டும் தான் போட்டிக்கு செல்ல முடிகிறது இருவரும் கலந்து கொள்ளும் அளவுக்கு பொருளாதாரம் இல்லை என வருத்தத்துடன் தெரிவித்தனர். மூத்த மகள் ரேஷ்மா போட்டியில் பங்கேற்க சென்ற பொழுது முறையான உணவுகளை உட்கொள்ளாத காரணத்தால் அவருடைய முட்டியில் உள்ள ஜவ்வு கிழிந்து தற்போது அதற்கு அறுவை சிகிச்சை கூட பெற முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்” யோகாவில் இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவிற்காக பதக்கங்கள் பெற்று தர வேண்டும் என்பதே இவர்களின் லட்சியமாக உள்ளது. மேலும் அதற்கு அரசாங்கமும் உதவி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இவர்களுக்கு உதவ வேண்டும் என நினைப்பவர்கள் 6385905561 (ரேஷ்மா) என்ற எண்ணிற்கு அழைத்து உதவி செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kancheepuram, Local News