முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் மனுநீதி நாள் முகாம்.. 186 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

காஞ்சிபுரத்தில் மனுநீதி நாள் முகாம்.. 186 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

X
காஞ்சிபுரத்தில்

காஞ்சிபுரத்தில் மனுநீதி நாள் முகாம்

Welfare schemes to beneficiaries at pudhupakkam Village : காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாக்கம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 186 பயனாளிகளுக்கு ரூ.3.04 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்க்குட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில், கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், திருத்தம், பட்டா நகல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, ஊனமுற்றோர் சக்கர வாகனம், இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுநீதி முகாமில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு 186 தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.3.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருத்திய வழிகாட்டி முறைகளின்படி மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பெறப்பட்ட மனுக்களில் வருவாய் துறை மூலம் அடிப்படை தேவைகளான இலவச வீட்டுமனைப் பட்டா 100 நபர்களுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 28 நபர்களுக்கும், குடும்ப அட்டை நகல் 10 நபர்களுக்கும், மகளிர் சுய உதவி குழுவிற்கு கீழ் நிதியுதவி -3 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் விலையில்லா தையல் இயந்திரம்-1 நபர்களுக்கும் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரத்தில் மனுநீதி நாள் முகாம்

மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் விலையில்லா தையல் இயந்திரம் - 2 நபர்களுக்கும், தொழில் துறை மூலம் தொழில் கடன் - 5 நபர்களுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் விவசாயப் பொருட்டுகள் - 5 நபர்களுக்கும், தோட்டக்கலை துறை மூலம் நாற்றுகள் -3 நபர்களுக்கும், கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுய உதவித் வங்கிக் கடன் - 9 நபர்களுக்கும் வழங்கப்பட்டன.

இதேபோல், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டம் - 5 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் 5 ஊராட்சிகளுக்கு குப்பை அள்ளும் மின்கல வாகனமும், தாட்கோ துறையின் மூலம் தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு 3 பணியாளர்களுக்கு உதவித்தொகையும், 7 நபர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிகழ்வில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், உதவி ஆட்சியர் அர்பித் ஜெயின், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு ,உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    First published:

    Tags: Kanchipuram, Local News