முகப்பு /காஞ்சிபுரம் /

333 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. காஞ்சிபுரம் மாவட்ட மனுநீதி நாள் முகாமில் வழங்கப்பட்டது..

333 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. காஞ்சிபுரம் மாவட்ட மனுநீதி நாள் முகாமில் வழங்கப்பட்டது..

X
333

333 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Kanchipuram District News | காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த தோட்டநாவல் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 333 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த தோட்டநாவல் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 333 பயனாளிகளுக்கு ரூ.4.37 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் சாலவாக்கம் அடுத்த தோட்டநாவல் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா 192 நபர்களுக்கும், முதியோர் ஒய்வுதியம் 17 நபர்களுக்கும்,மகளிர் சுய உதவிக்குழு வங்கிக்கடன் 4 நபர்களுக்கும், தூய்மை பணியாளர் நலவாரிய அடையாள அட்டை, தையல் இயந்திரம், தொழில் கடன், மடக்கு சக்கர நாற்காலி என மொத்தம் 333 பயனாளிகளுக்கு ரூ.4.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் வழங்கினர்.

இந்நிலையில், மனுநீதி நாள் முகாமில் பெறபட்ட மனுக்களை முறையாக பரிசிலித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன், ஒன்றிய குழு துணை தலைவர் வசந்தி குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News