முகப்பு /காஞ்சிபுரம் /

பணி ஓய்வு பெறும் நாளில் வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம்..

பணி ஓய்வு பெறும் நாளில் வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம்..

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர்

Kanchipuram News | பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணிபுரிந்து வந்தவர் பிரேமா(60), செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த பிரேமா வயது மூப்பின் காரணமாக நேற்றுடன் அரசு பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் இருந்தார். இந்நிலையில், செயல் அலுவலர் பிரேமா தனது பணிக்காலத்தில் குடிநீர் விநியோகம், தெரு விளக்கு, சுகாதார பொருட்கள் கொள்முதல் செய்வற்கு, டெண்டர் நடைமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் மூலமாக அரசிற்கு 10 கோடியே 74 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியுள்ளாதாகவும் தெரிகிறது. இதுகுறித்து புகாரின்பேரில் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் செயல் அலுவலர் பிரேமா பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக பேரூராட்சி பணிகள் இயக்குனர் கிரன்குர்லா உத்தரவிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பணி ஓய்வு பெறும் நாளில் வாலாஜாபாத் பேருராட்சி செயல் அலுவலர் பிரேமா பணியிட நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அரசு அலுவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Kanchipuram, Local News