முகப்பு /காஞ்சிபுரம் /

கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்..

கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்..

X
கிராம

கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

Village Administrative Officers Association Protest in Kanchipuram : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Kanchipuram, India

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ், மணல் கடத்தலை தடுத்த காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கம் மற்றும் அதன் தோழமை சங்கங்கள் சார்பில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாநில தலைமை நிலை செயலாளர் தியாகராஜன் முன்னிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் ஒன்று திரண்ட 200க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களும் வருவாய் துறை அலுவலர்களும் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கிராம நிர்வாக அலுவலரை படுகொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்கு தண்டனை வழங்க வேண்டும், வருவாய் துறை அலுவலர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

top videos
    First published:

    Tags: Kanchipuram, Local News