முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம்..

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம்..

X
காஞ்சி

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம்

Kanchipuram News : காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.  பூப்பல்லக்கில் உலா வந்த அன்னையை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து தரிசித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

சக்தி பீடங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 8ம் தேதி நிறைவடைந்தது.

இதனைத்தொடர்ந்து, காமாட்சி அம்மன் ஆலயத்தில் விடையாற்றி உற்சவம் வெகு விமர்சையாக கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்று வந்தது. அதாவது, பெரிய திருவிழாவையடுத்து உற்சவ தெய்வம் ஓய்வெடுக்கும் முறையாகக் கோயிலுக்குள் நடைபெறும் உற்சவத்தை விடையாற்றி உற்சவம் என்று அழைக்கின்றனர்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம்

இந்த உற்சவத்தின் கடைசி நாள் உற்சவமான பூப்பல்லக்கு வீதி உலா தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினரால் வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி விடையாற்றி உற்சவத்தின் கடைசி நாளில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஏற்பாட்டின் பேரில் மல்லிகைப்பூ, மனோரஞ்சித பூ,செண்பகப் பூ, சாமந்திப் பூ, துளசி, சம்பங்கி, தவணம், உள்ளிட்ட வண்ண வண்ண வாசனை மலர்களாலும் பச்சை கிளி பொம்மையாலும் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் காஞ்சி காமாட்சி அம்மன், பச்சை நிற பட்டு உடுத்தி, வைர வைடூரிய ஆபரணங்கள் அணிந்து, பச்சை நிற மனோரஞ்சிதம் பூ, மலர் மாலைகள் சூடி லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன், பூ பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதையும் படிங்க : திருநெல்வேலி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

பின்னர், மேள, வாத்தியங்கள் முழங்க,வான வேடிக்கைகளுடன் காஞ்சி நகரின் 4 ராஜ வீதிகளில் வலம் வந்தார். இவ்வாறு பூப்பல்லக்கில் உலா வந்து காட்சி அளித்த அன்னை காஞ்சி காமாட்சியை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து, காத்திருந்து தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Kanchipuram, Local News