முகப்பு /காஞ்சிபுரம் /

சுங்குவார்சத்திரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகள் சங்கம் நோட்டீஸ்

சுங்குவார்சத்திரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகள் சங்கம் நோட்டீஸ்

X
நோட்டீஸ்

நோட்டீஸ் கொடுக்கும் வியாபாரிகள்

Kanchipuram | காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதிதியில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எதிராக வியாபாரிகள் சங்கத்தினர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சிப்காட்டில், பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்த தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் ஊழியர்களை ஏற்றிச் செல்ல நூற்றுக்கணக்கான பேருந்துகள் தினசரி வந்து செல்கின்றனர்.

அதேநேரத்தில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுங்குவார்சத்திரம் வரும் பேருந்துகள் அனைத்தும் ஒரே நேரத்தில் சுங்குவார்சத்திரம் சந்திப்பில் குவிவதால் தினசரி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

மேலும் சுங்குவார்சத்திரம் சந்திப்பு அருகே வாலாஜாபாத் செல்லும் சாலை, திருவள்ளூர் செல்லும் சாலைகளில் இருபுறங்களிலும் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதைகளில் சிறு வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்துவந்தனர்.

இதனைக் கண்டிக்கும் வகையில் சுங்குவார்சத்திரம் மற்றும் மொளச்சூர் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சங்கத்தினர் நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை வரும் 25-ம் தேதிக்குள் அகற்றுமாறும் மீறினால் காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைதுறையினர் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று நோட்டீஸ் அச்சடித்துள்ளனர்.

40 அடி நீள காற்றாலை இறக்கையுடன் மாட்டிக்கொண்ட கனரக வாகனம்.. காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்..

அதனை சுங்குவார்சத்திரம் சந்திப்பு பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் சுங்குவார்சத்திரம் மற்றும் மொளச்சூர் வியாபாரிகள் சங்கத்தினர் விநியோகம் செய்தனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க வியாபாரிகள் சங்கத்தினர் கையில் எடுத்துள்ள முயற்சியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News