முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பெருந்தேவி தாயார் உள்புறப்பாடு உற்சவம்!

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பெருந்தேவி தாயார் உள்புறப்பாடு உற்சவம்!

X
காஞ்சி

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில்

Kanchi Varadharaja Perumal Temple : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பெருந்தேவி தாயார் உள்புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanchipuram, India

சித்திரை மாதம் வெள்ளிக் கிழமையை ஓட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பெருந்தேவி தாயார் உள்புறப்பாடு உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் சித்திரை மாதம் வெள்ளிக்கிழமையை ஒட்டி பெரும் தேவி தாயார் உள்புறப்பாடு உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது.  உள்புறப்பாடு உற்சவத்தை ஒட்டி பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிவப்பு பட்டு உடுத்தி திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, செண்பகப்பூ,கதம்ப மலர் மாலைகள் அணிவித்து, மேளதாளங்கள் முழங்க வேத பாராயணம் கோஷ்டியினர் பாடிவர கோவில் வளாகத்தில் பக்தர்கள் புடைசூழ உலா வந்தார்.

பெருந்தேவி தாயார் உள்புறப்பாடு உற்சவம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் கோவிலுக்கு திரும்பிய பெருந்தேவி தாயாருக்கு கும்ப ஆரத்தி காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவை கண்டருளினார். பெருந்தேவி தாயார் உள்புறப்பாடு உற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

top videos
    First published:

    Tags: Kanchipuram, Local News