முகப்பு /செய்தி /காஞ்சிபுரம் / தோசை பிரசாதம்... காஞ்சிபுரம் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினரிடையே மோதல்..!

தோசை பிரசாதம்... காஞ்சிபுரம் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினரிடையே மோதல்..!

வடகலை - தென்கலை பிரிவினரிடையே மோதல்

வடகலை - தென்கலை பிரிவினரிடையே மோதல்

வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறும் நிலையில் வடகலை - தென்கலை பிரிவினர் மீண்டும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் விழா மே மாதம் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 3ஆம் நாளான வியாழக்கிழமை காலை கருட சேவை உற்சவம், அதனை தொடர்ந்து இரவு ஹானுமந்த வாகன உற்சவமும் நடைபெற்றது. அப்போது சங்கரமடம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வடகலை பிரிவினர் வேத பாராயணம் பாடினர்.

இது தொடர்பாக வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து சாமிக்கு படைக்கப்பட்ட தோசை பிரசாதமாக வழங்கப்பட்டது. அப்போது, வடகலை பிரிவினர் வேத பாராயணம் பாடியபடி வந்த நிலையில், எதற்காக தென்கலை பிரிவினருக்கு தோசை வழங்கப்படுகிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருபிரிவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

செய்தியாளர் - சந்திரசேகர் ராமச்சந்திரன்

First published:

Tags: Kancheepuram