தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையானது அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-8 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதப் பாடத்தை புரிதலுடன் கற்பிக்க வானவில் மன்றத்தை துவங்கி செயல்படுத்திட ஆணையிட்டது. அதன்படி அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் வானவில் மன்றம் துவங்கப்பட்டது. வானவில் மன்ற செயல்பாடுகள் வாரந்தோறும் ஒருநாள் நடைபெறும். மாதத்தில் ஒருநாள் பள்ளிகளுக்கு சென்று அறிவியல் செயல்பாடுகள் சோதனைகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு செய்துக்காட்டி விளக்கம் அளித்திட STEM தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மாதத்தில் ஒரு நாளும் மற்ற மூன்று நாட்கள் பள்ளி கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியரும் வானவில் மன்ற நிகழ்வுகளை மேற்கொள்வார்கள்.
அந்த வகையில் அங்கம்பாக்கம், அவளூர், காவாந்தண்டலம் உள்ளிட்ட 19 பள்ளிகளின் Science Technology Engineering and Mathematics (STEM) தூதுவர் சங்கவி, அங்கம்பாக்கம் பள்ளியில் 6, 7, 8 மாணவர்களுக்கு காற்றழுத்தம் என்ற தலைப்பில் அறிவியல் செயல்பாடுகளையும், சோதனைகளையும் செய்துக்காட்டினார்.
இதில் மாணவர்கள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் செயல்பாடுகளில் பங்கேற்றனர். மேலும், தலைமையாசிரியர் தணிகை அரசு தலைமையில் இச்செயல்பாடுகளை பள்ளியின் வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர்களான அறிவியல் ஆசிரியர் சேகர், கணித ஆசிரியை லதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
மேலும், ஆசிரியர்கள் சீனிவாசன், பொற்கொடி ஆகியோரும் பங்கேற்றனர். வானவில் மன்ற தூதுவர் சங்கவிக்கு பள்ளியின் சார்பில் நன்றி தெரிவித்து புத்தகம் பரிசளிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News