முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் ஆட்சியரிடம் வேன் ஓட்டுநர்கள் முக்கிய கோரிக்கை

காஞ்சிபுரம் ஆட்சியரிடம் வேன் ஓட்டுநர்கள் முக்கிய கோரிக்கை

X
மனு

மனு அளித்த வேன் ஓட்டுநர்கள்

Kanchipuram | காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் வேன் ஓட்டுநர்கள் முக்கிய கோரிக்கைவைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் நகருக்குள் உள்ளூர் வேன்களை அனுமதிக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் வேன் ஓட்டுநர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாநகரில் ரங்கசாமிகுளம், ரயில்வே சாலை, அண்ணா அரங்கம் ஆகிய 3 இடங்களிலிருந்து மொத்தம் 72 வேன்கள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து காஞ்சிபுரம் வேன் ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.குமரவேல் மற்றும் சீனிவாசன் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘காஞ்சிபுரம் நகரில் உள்ள வேன்கள் வெளியூருக்கு சென்று விட்டு ஊருக்குள் வரும் போது அவற்றை காவல்துறை அனுமதிப்பதில்லை. மேலும் மாநகருக்குள் வந்தால் ஒவ்வொரு முறையும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதே நிலை கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை வாகனங்கள் மட்டுமே நகருக்குள் வர அனுமதிக்காமல் இருந்து வருகிறார்கள். எங்களையும் தொழிற்சாலைக்குரிய வாகனங்களாக நினைத்து நகருக்குள் வர அனுமதியளிக்காமல் இருப்பதில் நியாயமில்லை.

"கிராமங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துங்கள்" உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு காஞ்சி எஸ்பி வேண்டுகோள்!

எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. உள்ளூரில் இருந்து கொண்டு எங்களது குடும்பத்தினரை சந்திக்க கூட முடியவில்லை. எனவே உள்ளூருக்குள் காஞ்சிபுரம் வேன்களை அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

First published:

Tags: Kanchipuram, Local News