முகப்பு /காஞ்சிபுரம் /

விஏஓ மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை - காஞ்சிபுரத்தில் பரபரப்பு

விஏஓ மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை - காஞ்சிபுரத்தில் பரபரப்பு

X
Siege

Siege struggle in collector

கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஊத்துக்காடு கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர்.

  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஊத்துக்காடு கிராம மக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா ஊத்துக்காடு கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்களையும் வார்டு உறுப்பினர்களையும் பேசக்கூடாது என கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் கிராம சபை கூட்டத்தில், கிராம மக்களையும் கிராம வார்டு உறுப்பினர்களையும் பேசக்கூடாது என்று கூறிய கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு அளித்ததுடன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

இது குறித்து தகவல் அறிந்து, அங்கே விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் கிராம மக்களை தடுத்து நிறுத்தி சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் 10 பேர் கொண்ட குழுவினர் நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புகார் மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்கள்.

top videos

    இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின்பேரில் கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளிக்க வந்த கிராம மக்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    First published:

    Tags: Kancheepuram, Local News