ஏரிகள் நிறைந்த பகுதியான காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம், தென்னேரி உள்ளிட்டவைகளுக்கு அடுத்ததாக மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஏரியாக திகழ்கிறது உத்திரமேரூர் ஏரி. இந்த ஏரியானது பல்லவர் மன்னர்கள் ஆண்ட காலத்தில் கி.பி. 715 முதல் 825 ஆம் ஆண்டுகளில் வெட்டப்பட்டது. இந்த ஏரிக்கு வைர மேக தடாகம் என்ற பெயரும் உண்டு.
உத்திரமேரூர்- மானாம்பதி சாலை இந்த உத்திரமேரூர் ஏரிக்கு குறுக்கே செல்வதால் பெரிய ஏரி, சித்தேரி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,720 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து காணப்படும் இந்த ஏரியில் 13 மதகுகளும், மூன்று கலங்கள்களும், இரண்டு ஒழுங்கியமும் கொண்டு அமைந்துள்ளது. ஏரியின் மூலம் 18 கிராமத்தில் உள்ள சுமார் 5,436 ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேலும் காவனூர் புதுச்சேரி, கம்மாளம் பூண்டி, அரசாணிமங்கலம், அத்தியூர் உள்ளிட்ட ஏரிகளுக்கும் உபரி நீர் சென்று நிரம்பி வருகிறது. இத்தகைய சிறப்புகள் உடைய இந்த உத்திரமேரூர் ஏரியில் கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின் காரணமாக கரைகளில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதனை சீரமைத்து தர வேண்டும் என உத்திரமேரூர் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
விவசாயிகளின் இந்த வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக அரசின் பொதுப்பணி துறையின் மூலம் சுமார் 18 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு சுவர்களை அமைக்கவும், ஏரி கரைகளை புனரமைக்கவும், மதகுகளையும், கலங்கள்களையும், பலப்படுத்தி சீரமைத்து தர உத்தரவிட்டிருந்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதன்படி உத்திரமேரூர் ஏரி புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. ஏரி புனரமைப்பு பணிகள் தொடக்க விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், ஆகியோர் கலந்து கொண்டு ஏரி புனரமைப்பு பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
பூமி பூஜை தொடக்க விழாவில் பொதுப்பணி துறை செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் நீள்முடியான்,இளம் பொறியாளர் மார்க்கண்டன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கிராமப்புற விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kancheepuram, Local News