முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் கேக் சாப்பிட்ட இளைஞர்களுக்கு வாந்தி, மயக்கம் - இருவர் மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரத்தில் கேக் சாப்பிட்ட இளைஞர்களுக்கு வாந்தி, மயக்கம் - இருவர் மருத்துவமனையில் அனுமதி

இளைஞர்கள்

இளைஞர்கள்

Kanchipuram | காஞ்சிபுரத்தில் பேக்கரியில் வாங்கிய கேக்கை சாப்பிட்ட இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம்பேட்டை பகுதியில் பிறந்த நாள் கொண்டாட பேக்கரியில் வாங்கிய கேக்கை சாப்பிட்ட இரண்டு இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(18) மற்றும் சக்திவேல்(20). இருவரும் அவர்களது சித்தி மகள் பிறந்தநாளுக்காக கருக்குப்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பேக்கரி கடையில் கேக்கை வாங்கியுள்ளனர். வீட்டுக்கு சென்று பிறந்தநாள் கேக்கை வெட்ட முயன்ற போது கேக் மிகவும் கடினமாக இருந்ததாகவும் வெட்ட முடியாமல் இருந்ததால் கேக்கை எடுத்துக்கொண்டு பேக்கரி ஊழியரிடம் முறையிட்டுள்ளனர்.

கேக்கை பேக்கரிக்கு கொண்டு சென்று கேக் கெட்டுப் போய்விட்டதாக கூறியதற்கு பேக்கரி ஊழியர்கள் கேக் நன்றாக உள்ளதாகவும் இந்த கேக்கை சாப்பிடலாம் என்றும் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து இருவரும் அந்த கேக்கை அங்கேயே சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சாப்பிட்ட சில நிமிடங்களில் இருவருக்கும் வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் | ஆட்சியர் முன்பு திடீரென கையை ப்ளேடால் கிழித்துக் கொண்ட நபரால் பரபரப்பு

இந்நிலையில் அருகில் உள்ளவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். பின்னர், இருவரும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News