முகப்பு /காஞ்சிபுரம் /

உலக வனங்கள் தினம்.. காஞ்சிபுரத்தில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு.!

உலக வனங்கள் தினம்.. காஞ்சிபுரத்தில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு.!

X
மரக்கன்றை

மரக்கன்றை நடவு செய்யும் உதவி ஆட்சியர் 

World Forests Day | உலக வனங்கள் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் முசரவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மரகன்றுகளை நடவு செய்யப்பட்டது.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுடன் இணைந்து சரக காவல்துறை துணை தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆட்சியர் ஆகியோர் மரகன்றுகளை நடவு செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 21ஆம் தேதி உலக வனங்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முசரவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக வனகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து வளாகம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட மரகன்றுகளை காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர் பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மற்றும் உதவி ஆட்சியர் (பயிற்சி) அர்பித் ஜெயின் ஆகியோர் மர கன்றுகளை நடவு செய்தனர்.

முன்னதாக,மரங்களை வளர்ப்பதால் ஏற்படும் பயன்கள் மற்றும் மரங்கள் இல்லையென்றால் விளையக்கூடிய தீமைகள் குறித்து எடுத்துரைத்து சிறப்புரையாற்றி மரங்களை வளர்ப்போம், வனங்களை காப்போம் என உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, வனத்துறை அதிகாரிகள் ராஜ்குமார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News, Tree plantation