முகப்பு /காஞ்சிபுரம் /

விவசாயத்தைப் பாதுகாக்க... காஞ்சிபுரத்தை வலம் வந்த டிராக்டர் பேரணி

விவசாயத்தைப் பாதுகாக்க... காஞ்சிபுரத்தை வலம் வந்த டிராக்டர் பேரணி

டிராக்டர் பேரணி

டிராக்டர் பேரணி

Kanchipuram Tractor Rally | காஞ்சிபுரத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு டிராக்டர் பேரணி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

விவசாயத்தை பாதுகாத்திடக்கோரி தேசிய கொடியுடன் டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து ஊர்வலம் நடைபெற்றது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு தலைமையில் குடியரசு தினத்தை முன்னிட்டு  விவசாயத்தை பாதுகாத்திடக் கோரி தேசிய கொடியுடன் டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

சின்ன காஞ்சிபுரம் பெருமாள் கோவில் செட்டித் தெருவில் துவங்கிய இப்பேரணியில் ஏராளமான விவசாயிகள் தேசிய கொடியுடன் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களில் பங்கேற்று அணிவகுத்து ரங்கசாமி குளம் வரை ஊர்வலமாக சென்றனர்.

சுபமுகூர்த்த மாதம்.. பட்டு நகரத்துக்கு படையெடுக்கும் மக்கள்..! திணறும் காஞ்சிபுரம்

மேலும் இந்த டிராக்டர் பேரணியில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் பங்கேற்று டிராக்டரில் அமர்ந்துக்கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. டிராக்டர் பேரணியை யொட்டி ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

First published:

Tags: Kanchipuram, Local News