ஹோம் /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரம் திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோவிலில் தெப்பல் உற்சவம்

காஞ்சிபுரம் திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோவிலில் தெப்பல் உற்சவம்

தெப்பத்தில் வலம் வரும் ஸ்ரீ விஜயராகவ பெருமாள்

தெப்பத்தில் வலம் வரும் ஸ்ரீ விஜயராகவ பெருமாள்

Thiruppukuzhi sri vijayaraghava perumal temple | தெப்பல் உற்சவத்தை பாலு செட்டி சத்திரம், திருப்புட்குழி, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோவிலில் தெப்பல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான,சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி ஸ்ரீ மரகதவல்லி சமேத ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோவிலில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

தெப்பல் உற்சவத்தை ஒட்டி விஜயராகவ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவி, மற்றும் மரகத வல்லி தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் கோவில் அருகில் உள்ள ஜடாயு தீர்த்தம் எனும் திருக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அமர்ந்து கோவில் குளத்தில் மூன்று சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தெப்பல் உற்சவத்தை பாலு செட்டி சத்திரம், திருப்புட்குழி, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தெப்பல் உற்சவத்தை கண்டு களித்து விஜயராகவப் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

First published:

Tags: Kancheepuram, Local News