முகப்பு /செய்தி /காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து... 7 பேர் பரிதாப பலி..!

காஞ்சிபுரம் பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து... 7 பேர் பரிதாப பலி..!

காஞ்சிபுரம் வெடிவிபத்து

காஞ்சிபுரம் வெடிவிபத்து

காஞ்சிபுரம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Kanchipuram, India

தமிழ்நாட்டில் பட்டாசு குடோன்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம்  குருவிமலை அடுத்த வளத்தோட்டத்திலுள்ள பட்டாசு குடோனில் திடீரென  பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டதால், சுற்றுவட்டாரப் பகுதியில் சிறிய அளவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

குடோனில் 10க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்த நிலையில், உடனடியாக தீ அணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. தீயில் சிக்கிய 7 பெண்கள் உட்பட 13 பேரை மீட்ட தீயணைப்புத் துறையினர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்ற 7 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

First published:

Tags: Firecrackers, Kanchipuram