முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சியில் விதிகளை மீறிய லோட் வாகனங்களுக்கு அபராதம்!

காஞ்சியில் விதிகளை மீறிய லோட் வாகனங்களுக்கு அபராதம்!

X
விதிகளை

விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

Kanchipuram | காஞ்சியில் நடைபெற்ற சோதனையில் டாட்டா மேஜிக் மற்றும் ஷேர் ஆட்டோ, லோடு வண்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததால் அபராதம் விதிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram | Kancheepuram (Kanchipuram)

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, டாட்டா மேஜிக் வாகனங்களினால் காஞ்சிபுரம் நகரில் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த வாகனம் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், சரிவர போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில்லை என பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.

இதன் அடிப்படையில், சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் அருகே காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் கா. பன்னீர்செல்வம் தலைமையில் B2 விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் இணைந்து சோதனையை தீவிரப்படுத்தினர்.

இதில் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த 10 டாடா மேஜிக் மற்றும் 2 சரக்கு வாகனம் என மொத்தம் 12 வாகனங்களுக்கு, பல்வேறு விதிமீறல்களுக்காக அபாரதமாக ரூபாய் 93,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தகுதி சான்று இல்லாத தண்ணீர் கேன் ஏற்றி சென்ற ஒரு வாகனம் சிறைபிடிக்கபட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.

First published:

Tags: Kanchipuram, Local News, Traffic Rules