முகப்பு /காஞ்சிபுரம் /

நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது.. மது பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு கொடுத்த காஞ்சிபுரம் ஆட்சியர்..

நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது.. மது பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு கொடுத்த காஞ்சிபுரம் ஆட்சியர்..

மாதிரி படம்

மாதிரி படம்

Tasmac will Be Closed on Feb 5th : காஞ்சிபுரத்தில் மதுபானக்கடைகள் மூடப்படுவது தொடர்பாக ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (5ம் தேதி) மதுபான கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1989 விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி அனைத்து இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் வரும் பிப்ரவரி 5ம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாளையொட்டி நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில், அரசின் அறிவிப்பினை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் ( IMFL) மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (Bar) ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: Kanchipuram, Local News