முகப்பு /காஞ்சிபுரம் /

காஞ்சிபுரத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

காஞ்சிபுரத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

மாதிரி படம்

மாதிரி படம்

Tasmac Shops Closes In Kanchipuram : காஞ்சிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் நாளை மே தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “மே முதல் நாள் உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற நாள் மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், நாளை (01.05.2023) மதுபான கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும். அதன்படி தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1989 விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின் படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் கீழ்கண்ட நாட்களில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பினை தொடர்ந்து, நாளை (01.05.2023 திங்கட்கிழமை) மே தினத்தன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Kanchipuram, Local News