முகப்பு /காஞ்சிபுரம் /

மகாவீர் ஜெயந்தி.. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்! காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி!

மகாவீர் ஜெயந்தி.. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்! காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி!

டாஸ்மாக் கடைகள் மூடல்

டாஸ்மாக் கடைகள் மூடல்

Kanchipuram | மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, வரும் 4ஆம் தேதி (செவ்வாய் கிழமை)முழுவதும் டாஸ்மாக்மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும்மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில்கூறியிருப்பதாவது: வரும் 4ஆம்தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1989, விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி, அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்களை, நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

எனவே, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, 4ஆம் தேதி (செவ்வாய் கிழமை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் (பார்) ஆகியவற்றை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்றுதெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Kanchipuram, Local News, Tasmac