முகப்பு /காஞ்சிபுரம் /

'இடர்படி வழங்க வேண்டும்..' காஞ்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை!

'இடர்படி வழங்க வேண்டும்..' காஞ்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை!

X
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்

Kanchipuram News : காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ரா.அழகிரிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவு செய்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், பணி நியமன அலுவலரே தகுதிகாண் பருவம் விளம்புகை செய்ய வேண்டும்.

பேரிடர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இடர்படி வழங்க வேண்டும். நிலையான பயணப்படியை ரூ. 2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். டி.எஸ்.எல்.ஆர்., கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர்களிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மோகனரங்கன், மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி,காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்ளிட்ட 37 மாவட்டங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News